இமயச்சாரலில் உள்ள இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் வெப்பநிலை மைனஸ் டிகிரிக்கும் கீழே சென்றுள்ளது. இதனால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் 1 முதல் 5 அடி வரை பனிப்பொழிவு பதிவாகியுள்ள நிலையில், 4 தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட மொத்தம் 504 சாலைகள் மூடப்பட்டுள்ளன. காஷ்மீருக்கு நிகராக தொடர் பனிப்பொழிவு காணப்படுவதால் சாதாரண நகரங்கள் கூட சுற்றுலாப் பகுதிகளாக மாறிவிட்ட நிலையில், இமாச்சலின் அனைத்து பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.